“சந்திரயான்-2” 98 சதவீத வெற்றி என்பது எனது சொந்தக் கருத்து அல்ல, குழுவின் கணிப்பு ஆகும்

சந்திரயான்-2 திட்டம் 98 சதவீதம் வெற்றி பெற்றுள்ளதாக தான் கூறியது தனது சொந்தக் கருத்து அல்ல என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

சந்திரயான்-2 திட்டம் 98 சதவீதம் வெற்றி பெற்றதாக சிவன்  கூறியது குறித்து மூத்த விஞ்ஞானிகள் சிலர் கேள்வி எழுப்பினர். ஆழமான சுயபரிசோதனை செய்யாமல் கருத்து தெரிவிப்பது, உலகத்தின் முன்னாள் நம்மை நகைப்புக்கு உரியவர்கள் ஆக்கிவிடும் என அவர்கள் கூறியிருந்தனர். இந்நிலையில் சந்திரயான்-2 திட்டம் 98 சதவீதம் வெற்றி பெற்றுள்ளதாக கூறியது, தனது சொந்த கருத்து அல்ல, அதற்கான குழு ஆராய்ந்து மதிப்பீடு தெரிவித்தது என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெளிவுபடுத்தியுள்ளார். விக்ரம் லேண்டர் தொடர்பு எப்படி துண்டிக்கப்பட்டது, அதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த குழுவானது இந்த திட்டத்தின் அனைத்து கட்டங்களையும் ஆராய்ந்து, 98 சதவீதம் வெற்றி அடைந்திருப்பதாக முதற்கட்ட மதிப்பீடு செய்தது என அவர் தெரிவித்துள்ளார். எனவே இது தன்னுடைய கருத்து மட்டும் அல்ல என்று தெளிவுபடுத்தியுள்ள சிவன், இந்தக் குழு இறுதி அறிக்கையை திட்ட மேலாண்மை அலுவலகத்தில் தாக்கல் செய்யும் என்றும் கூறியுள்ளார்.

Related Posts