சபரிமலையை போர்க்களமாக்க ஆர்.எஸ்.எஸ். முயற்சி: கேரள முதல்வர்

        சபரிமலை ஐயப்பன் கோவிலைப் போர்க்களமாக்க ஆர்.எஸ்.எஸ். முயல்வதாகக் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சபரிமலை ஐயப்பன் கோவில் தொடர்பான தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்படும் என உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

அரசோ காவல்துறையினரோ பக்தர்களைத் தடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டார். போராட்டக்காரர்கள் வாகனங்களைச் சோதனையிடுவதாகவும், பெண் பக்தர்களையும் செய்தியாளர்களையும் தாக்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஊடகத்துறையினர் மீது இத்தகைய தாக்குதல் நடப்பது கேரள வரலாற்றிலேயே இதுதான் முதன்முறை என்றும் பினராயி விஜயன் தெரிவித்தார்.

Related Posts