சபரிமலை ஐயப்பன் கோவிலில் வழிபாடு நடத்த பெண்களுக்கும் உரிமை உள்ளது: உச்சநீதிமன்றம்

 

 

சபரிமலை ஐயப்பன் கோவிலில் வழிபாடு நடத்த ஆண்களைப்போல பெண்களுக்கும் உரிமை உள்ளது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

சபரிமலையில் ஐயப்பன் கோவிலில் வழிபாடு நடத்த அனைத்து பெண்களையும் அனுமதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு, தலைமை நீதிபதி தீபக்மிஷ்ரா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. சபரிமலை கோயிலில் பெண்கள் நுழைவது தொடர்பான விவகாரத்தில், எதன் அடிப்படையில் அனுமதி மறுக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி , பெண்களுக்கு அனுமதி மறுப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று கண்டனம் தெரிவித்தார். பொதுவாக கோயிலை திறந்தால் யார் வேண்டுமானாலும் செல்ல முடியும் என்று கூறிய தலைமை நீதிபதி, சபரிமலையில் வழிபாடு நடத்த ஆண்களுக்கு உள்ளது போல், பெண்களுக்கும் உரிமை உள்ளது என்று உறுதிபட கூறினார். வழிபாட்டில் உரிமை உள்ளது. இந்த விவகாரத்தில் கேரள அரசு நிலைப்பாட்டை மாற்றுவது ஏன்? என்று வினவியதுடன், வழிபாட்டில் அனைவருக்கும் சம உரிமையை வழங்க வேண்டும் என திட்டவட்டமாக தெரிவித்தார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கேரள அறநிலையத்துறை அமைச்சர் சுரேந்திரன், “சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்பதே தங்கள் அரசின் நிலைப்பாடு என பிரமானப்பத்திரம் தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்தார். இது தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை ஏற்றுக்கொள்வோம் என்று கூறிய அமைச்சர் சுரேந்திரன், கேரள தேவசம் போர்டு மாநில அரசின் நிலைப்பாட்டுக்கு ஒத்துழைப்பு கொடுத்துள்ளதுஎன விளக்கமளித்தார்.

Related Posts