சபரிமலை கோயில் விவகாரம் தொடர்பாக கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம்

சபரிமலை கோயில் விவகாரம் தொடர்பாக கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

கேரளா மாநிலம் , திருவனந்தபுரம் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு, அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பா.ஜ.க.வை சேர்ந்த வேணுகோபாலன் என்பவர், காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்தார்.

போராட்டத்தில் ஈடுபட்ட அவர் தீக்குளித்து 90 சதவீதம் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி வேணுகோபால் உயிரிழந்தார் .

இதளையடுத்து கேரளாவில், பா.ஜ. சார்பில் இன்று முழு கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முழு அடைப்பு போராட்டத்தையடுத்து, கன்னியாகுமரி வழியாக கேரளா செல்லும் தமிழக பேருந்துகள் தமிழக கேரள எல்லைப் பகுதியான, களியக்காவிளையில் நிறுத்தப்பட்டுள்ளது. தவிர சரக்கு வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

 

Related Posts