சபரிமலை கோவிலுக்கு சென்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கொலை மிரட்டல்

சபரிமலை கோவிலுக்கு சென்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று புனேயை சேர்ந்த பெண் சமூக ஆர்வலர் ஒருவருக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது.

           சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சமீபத்தில் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இந்த தீர்ப்புக்கு ஆதரவும் எதிர்ப்பும் உள்ளன. சம உரிமைக்காக போராடி வரும்புனேயை சேர்ந்த பெண் ஆர்வலர் திப்தி தேசாய் இந்த தீர்ப்பை வரவேற்றதோடு, சபரிமலை கோவிலுக்கு தான் செல்ல போவதாகவும் அறிவித்தார்.

           இந்நிலையில் திப்தி தேசாய்க்கு கடிதங்கள் மற்றும் முகநூலில் கொலை மிரட்டல்கள் வந்துள்ளன. அதில் சபரிமலை கோவிலுக்கு சென்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டி உள்ளதாகவும், நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் தனது புகைபடத்தை போலியாக சித்தரித்து வெளிட்டுள்ளதாகவும் திப்தி தேசாய் தெரிவித்துள்ளார். மேலும், கடந்த காலங்களில் தனக்கு வந்த மிரட்டல்களை விட தற்போது,இடைவிடாது அருவருக்கத்தக்க வகையில் அவதூறுகள் வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts