சபரிமலை கோவிலுக்கு தனிச்சட்டம்

சபரிமலை கோயிலை நிர்வகிக்க தனிச்சட்டம் கொண்டு வர ஆலோசிப்பதாக உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு அறிவித்துள்ளது.

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 முதல் 50 வயதுடைய பெண்கள் நுழைய மாநில அரசு தடை விதித்திருந்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அனைத்து வயதுடைய பெண்களும் கோவிலுக்கு செல்லலாம் என கடந்த ஆண்டு செப்டம்பரில் தீர்ப்பு அளித்து உத்தரவிட்டது. ஆனாலும் இந்த உத்தரவை மாநில அரசு ஏற்க மறுத்தது.
சபரிமலை கோவிலில் நுழைய முயன்ற பெண்களை பக்தர்கள் தடுத்து நிறுத்தினர். கடந்த டிசம்.,- ஜன., மாதங்களில் பெண்கள் நுழைய எதிர்ப்பு தெரிவித்து பல போராட்டங்களும் நடந்தது. ஆண் வேடமிட்டு நுழைய முயன்ற பெண்களும் தடுத்து நிறுத்தப்பட்டனர். மேலும் பல போராட்டங்களால் சபரிமலை பகுதியில் பரபரப்பு நிலவியது.

இந்நிலையில் சபரிமலை கோவிலை நிர்வகிக்க தனிச்சட்டம் கொண்டு வர ஆலோசிக்கப்பட்டு வருகிறது. தேவஸ்தானம் கட்டுப்பாட்டில் இயங்கும் கோவிலின் நிர்வாகத்திலும் மாற்றம் கொண்டுவரவும் ஆலோசனை நடைபெற்றதாக உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு தெரிவித்துள்ளது.

Related Posts