சபரிமலை விவகாரம்: சீராய்வு மனுவை அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு

Want create site? Find Free WordPress Themes and plugins.

சபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

அனைத்து வயது பெண்களையும் சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்த 28ஆம் தேதி தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மேல்முறையீடு செய்யபோவதில்லை என திருவிதாங்கூர் தேவசன் போர்ட் தலைவர் பத்மகுமார் தெரிவித்தார். இதனிடையே, கேரள முதல்வர் பினராயி விஜயனும், சீராய்வு மனுத்தாக்கல் செய்யப்போவதில்லை எனவும்,  சபரிமலை கோயிலுக்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பும், வசதியும் செய்து கொடுக்கப்படும் எனவும் கூறினார்.

இந்த தீர்ப்பை அமல்படுத்தும் நடவடிக்கையில் கேரள அரசு தீவிரமாக இறங்கியது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து ஐயப்ப பக்தர்கள் மற்றும் பெண்கள் பேராட்டம் நடத்தினர். இதனிடைய தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கத்தலைவர், ஷியாலஜா விஜயன் உச்சநீதிமன்றத்தில் நேற்று சீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அரசியல் சாசனத்திற்கு எதிராக தீர்ப்பு வழங்கியிருப்பதாகவும், இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்கே. கவுல், கே.எம்.ஜோசப் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை அவசரமாக விசாரிக்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர்.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Related Posts