சமஸ்கிருதம் இறந்து போன மொழி வைகோ ஆவேசம்

சமஸ்கிருதம் இறந்து போன மொழி என்று ம.தி.மு.க பொது செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ ஆவேசமாக தெரிவித்துள்ளார்

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் ம.தி.மு.க பொது செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “ சமஸ்கிருதம் ஒரு இறந்து போன மொழி என்பதை நான் ஆயிரம் முறை கூறுவேன் என்று ஆவேசமாக தெரிவித்தார்.  வட மாநிலத்தவர்களுக்கு புரியும்படி சமஸ்கிருதம் ‘டெத் லாங்குவேஜ்’ என ஆயிரம் முறை சொல்லுவேன் எனவும் இதற்காக யாருக்கும் நான் பயப்படமாட்டேன் எனவும் தெரிவித்தார்.

தமிழை விட சமஸ்கிருதம்தான் பழமையானது என்ற ஒரு பொய்யான தகவலை தமிழக பாடத்திட்டத்தில் திணித்துள்ளதாகவும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனை தான் குறை கூறவில்லை  என குறிப்பிட்ட அவர், தவறான தகவலை சரிசெய்ய நடவடிக்கை எடுத்து வருகிறார்” எனத் தெரிவித்தார்.

மேலும், “ தமிழக பாடத்திட்டத்தில் சமஸ்கிருதம் தான் பழமையானது என பொய்யான தகவலை கொண்டு வந்து திணித்தது யார்? என்றும் அந்த துரோகி, கயவன் யார்? ” என்றும் அவர் கேள்வி யெழுப்பினார்

Related Posts