சமாதானத்திற்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் : பாகிஸ்தான் பிரதமர் வேண்டுகோள்

சமாதானத்திற்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

அண்மையில்,  ராஜஸ்தானில் நடந்த பொதுக்கூட்டத்தில் புல்வாமா தாக்குதல் குறித்து பேசிய மோடி,பயங்கரவாதத்திற்கு எதிராக ஒட்டுமொத்த உலகமும் ஒன்றிணைந்துள்ளதாகவும்  பயங்கரவாதத்திற்கு காரணமானவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.  பயங்கரவாதத்திற்கு நல்ல முறையில் முடிவு கட்டும் நேரம் வந்து விட்டது என்றும் .  பயங்கரவாதத்தை எப்படி ஒடுக்க வேண்டும், என்பது தங்களுக்கு தெரியும் என்றும் கூறியிருந்தார். இதனிடையே அபுதாபியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த  பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப், இந்தியா – பாகிஸ்தான் இடையிலான உறவு மீண்டும் அபாய கட்டத்திற்கு சென்று விட்டதாக தெரிவித்தார்.  வருங்காலத்தில் இரு நாடுகள் இடையே அணு ஆயுத தாக்குதல் நடைபெறாது என்றும் . அப்படி ஒருவேளை  இந்தியா மீது ஒரு அணுகுண்டு வீசி தாக்கினால் அவர்கள்  20அணுகுண்டுகள் வீசி பாகிஸ்தானை அழித்து விடுவார்கள் என்றும் தெரிவித்தார். இந்நிலையில், புல்வாமா தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வெளியிட்டுள்ள அறிக்கையில், துரதிருஷ்டவசமாக,இந்தியாவில் தேர்தல்களால் இப்போது சமாதானம் மழுங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.  தாக்குதல் தொடர்பான உளவுத்துறை ஆதாரங்களை இந்தியா கொடுத்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்சமாதானத்திற்கு  வாய்ப்பு கொடுக்க வேண்டும் என இந்திய அரசை கேட்டுக் கொள்வதாகவும் அந்த அறிக்கையில் இம்ரான்கான் கூறியுள்ளார்.

Related Posts