சமூகவலைதளங்கள் மூலம் பயனற்ற விஷயங்களை பரப்ப வேண்டாம் – பிரதமர் மோடி

சமூகவலைதளங்கள் மூலம் பயனற்ற விஷயங்களை பரப்ப வேண்டாம் என நாட்டு மக்களை பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

வாரணாசி தொகுதியில் உள்ள பாஜக தொண்டர்கள் மற்றும் தன்னார்வலர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், நாட்டு மக்களைச் சுற்றி நல்ல விஷயங்கள் இருப்பதாகவும் அதை விட்டுவிட்டு சமூகவலைதளங்களில் குப்பை விஷயங்களைப் பரப்புவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

சமூக வலைதளங்களில் நல்ல தகவல்களை பதிவிட வேண்டும் எனவும்,  நேர்மறையான செய்திகளை பதிவிடுவதன் மூலம் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தை பெறலாம் எனவும் பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார். சமூகத்தை குறித்து யோசிக்காமல் பெண்களை தவறாக சித்தரித்து எழுதுவதால் நேரும் விளைவுகளை, பதிவிடுவோர் கவனிப்பதில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி வேதனை தெரிவித்துள்ளார்.

Related Posts