சமூக ஆர்வலர்களை இந்தியா உள்ளிட்ட நாடுகள் பழிவாங்குகிறது

சமூக ஆர்வலர்களை இந்தியா உள்ளிட்ட நாடுகள் பழிவாங்குவதாக ஐ.நா. மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.

     ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் 9 வது ஆண்டு அறிக்கையை அதன் தலைவர் ஆன்டானியோ வெளியிட்டுள்ளார். இதில் சமூக ஆர்வலர்கள் கொல்லப்படுவது, கைது செய்யப்படுவது,பழிவாங்கப்படுவது உள்ளிட்டவை இந்தியா, சீனா போன்ற நாடுகளில் அதிகாரித்து வருவதாகவும், மனித உரிமை ஆணையத்தில் உறுப்பினராக உள்ள 38 நாடுகளில் இது போன்ற குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சட்டம், அரசியல், நிர்வாகம் உள்ளிட்டவை சமூக ஆர்வலர்களை பழிவாங்க தவறாக பயன்படுத்தப்படுவது அதிகரித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.  குற்றங்கள் அதிகரித்து வரும் நாடுகளின் பட்டியலில் அல்ஜீரியா, பக்ரைன், சீனா, எகிப்து, இந்தியா, ஈரான் உள்ளிட்ட நாடுகள்இடம்பெற்றுள்ளன.

Related Posts