சமூக ஆர்வலர்கள் உயிருக்கு அச்சுறுத்தல் : வைகோ குற்றம்சாட்டு

Want create site? Find Free WordPress Themes and plugins.

தமிழ்நாட்டின் மனித உரிமை செயல்பாட்டாளர்கள், சமூக ஆர்வலர்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை எம்.பி.யுமான வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரூர் மாவட்டம் – குளித்தலை அருகே, 50 பேர் நீர் நிலைப் பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்துள்ளது தொடர்பான வழக்கை சுட்டிக்காட்டியுள்ளார். அரசுக்குச் சொந்தமான நீர் நிலை ஆக்கிரமிப்பை அகற்ற சட்டம் போராட்டம் நடத்திய 70 வயது நிரம்பிய இயற்கை ஆர்வலர் வீரமலையும், அவரது மகனும் கடந்த ஜுலை மாதம் 29-ந் தேதி படுகொலை செய்யப்பட்டது மிகுந்த அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளதாகக் கூறியுள்ளார்.

கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழகத்தில் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு, மணல் கொள்ளை, மது, சாதி வன்மம் ஆகியவற்றுக்கு எதிராக போராடி வந்த மனித உரிமை ஆர்வலர்கள் 38 பேர் படுகொலை செய்யப்பட்டதாக எவிடன்ஸ்அமைப்பு தெரிவித்து இருப்பது கடும் அதிர்ச்சி அளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எடப்பாடி பழனிச்சாமி அரசு, ஜனநாயக முறையில் போராடி வரும் மக்களுக்கு எதிராக ஒடுக்குமுறையை ஏவிவிடுவதற்கு ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம், சேலம் – சென்னை எட்டுவழிச் சாலை எதிர்ப்புப் போராட்டம், விளை நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிரான போராட்டம் ஆகியவையே சான்று என அவர் தெரிவித்துள்ளார். மணல் கொள்ளைக்கு எதிராகப் போராடிய சமூக ஆர்வலர் புகழூர் விசுவநாதனை நள்ளிரவில் அடித்து, உதைத்துக் கைது செய்து, முகிலன் வழக்கில் அவரையும் சேர்த்து தமிழக அரசு சிறை வைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் சமூக ஆர்வலர்கள், மனித உரிமைப் போராளிகள் தொடர்ந்து தமிழக அரசின் அடக்குமுறைக்கு உள்ளாவது தொடர்ந்துகொண்டு இருப்பதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இதனால், ஊக்கம் பெற்று இருக்கின்ற சமூக விரோதிகளும், மணல் கொள்ளையர்களும் மனித உரிமை ஆர்வலர்களைப் படுகொலை செய்யும் போக்கு சர்வ சாதாரணமாக நடந்து வருவது கடும் கண்டனத்துக்கு உரியது என அவர் கூறியுள்ளார். எனவே தமிழக அரசு, தமிழகத்தின் இயற்கை வளத்தையும், நீர்வளத்தையும், வாழ்வாதாரங்களையும் பாதுகாக்க போராடி வரும் சமூகப் போராளி திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். முதலைப்பட்டியில் வீரமலை, நல்லதம்பி ஆகியோரைப் படுகொலை செய்த குற்றவாளிகள் எவராக இருந்தாலும் உடனடியாகக் கைது செய்து, கூண்டில் நிறுத்த வேண்டும் எனவும், இதுபோன்ற நிகழ்வுகள் இனி தமிழகத்தில் தொடர அனுமதிக்கக் கூடாது என்றும் வைகோ தமது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Related Posts