சமூக நல்லிணக்கத்திற்கு பங்கம் விளைவிப்பவர்களை  காவல்துறை ஒடுக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் 

இதுதொடர்பாக அவர் வெளிட்டுள்ள அறிக்கையில், அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் 20-க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்டோரின் வீடுகள் அடித்து நொறுக்கி சேதப்படுத்தப்பட்டதையும், அப்பாவி மக்கள் பலர் கடும் தாக்குதலுக்குள்ளானதையும் காவல்துறை வேடிக்கை பார்த்தது கடும் கண்டனத்திற்குரியது என்று தெரிவித்துள்ளார். வீடுகளை உடைக்கும்” கேடான பழக்கத்திற்கு மீண்டும் தூபம் போட்டு ஒரு சில சக்திகள் சிதம்பரம்  தொகுதியில் கலவரம் ஏற்படுத்தியதை காவல்துறை முன்கூட்டியே தடுத்திருக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார். தேர்தல் நாளன்று ஆம்பூர் பகுதியில் வாக்குசாவடியைக் கைப்பற்ற முயற்சியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது எனவும்,  தர்மபுரி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பாப்பி ரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியில் உள்ள நத்த மேடு வாக்குச்சாவடியையே கைப்பற்றி வாக்களித்த கொடுமையை ஒரு ஆங்கிலப் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். .தற்போது புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதிப் பகுதியிலும் இரு பிரிவினருக்கு இடையில் மோதல் ஏற்பட்டு அங்கும் அமைதி சீர்குலைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் நேரத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக தி.மு.க சார்பில் அ.தி.மு.க. அரசுக்கு ஆதரவாக செயல்படும் காவல் அதிகாரிகள் பலரை மாற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுக்கப்பட்டதாகவும், .ஆனால் அந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் தேர்தலை நடத்தியதன் விளைவுதான் இன்றைக்கு சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகள் ஏற்பட்டு இணக்கமாக வாழும் மக்கள் மத்தியில் இனம் புரியாத பீதி தோற்று விக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.எனவே , சமூக நல்லிணக்கத்திற்குச் சிறிதும் பங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடும் சுயநல சக்திகள் யாராக இருந்தாலும் இரும்புக் கரம் கொண்டு அடக்கி பொது அமைதியை நிலைநாட்டிட வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரியையும், தேர்தல் டி.ஜி.பி.யையும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதாக அந்த அறிக்கையில்.மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

 

Related Posts