சமூக வலைதளங்கள் மூலம் இளைஞர்களை பயங்கரவாதம் நோக்கி இழுக்க முயற்சி

காஷ்மீர் இளைஞர்களை பயங்கரவாதம் நோக்கி இழுக்க பாகிஸ்தான் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதாக இந்திய ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்து . உதாம்பூரில் பேசிய லெப்டினட் ஜெனரல் ரன்பீர் சிங்,   ஜம்மு காஷ்மீர் இளைஞர்களிடம் ஆதரவை பெறுவதற்காகவும்,அவர்களை பயங்கரவாதம் நோக்கி இழுக்கவும் பாகிஸ்தான் ராணுவம் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதாக தெரிவித்தார்.  காஷ்மீரில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை சீர்குலைக்க முயற்சிப்பதாகவும்  பயங்கரவாதம் ஒட்டு மொத்த உலகத்துக்கே அச்சுறுத்தலாகஇருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்திய ராணுவத்தின் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை தற்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது எனவும், . வரும் ஆண்டுகளில், காஷ்மீரில் அமைதி மற்றும் செழுமை வளர்ச்சியை காண்போம் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.  பயங்கரவாத முகாம்கள் மீது மீண்டும் ஒரு சர்ஜிக்கல் தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளதாக லெப்டினட் ஜெனரல் ரன்பீர் சிங் தெரிவித்தார்

Related Posts