சரக்கு வாகனம் மோதி இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு

ஈரோடு அருகே சரக்கு வாகனம் மோதியதில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சித்தோடு அரசு மேல்நிலைப் பள்ளி அருகே நேற்று மாலை சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவர்கள் தர்ஷன் மற்றும் சிவா ஆகியோர் மீது சரக்கு வேன் ஒன்று வேகமாக மோதியதால் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் மேலும் ஒரு மாணவன் படுகாயம் அடைந்தான். விபத்தை ஏற்படுத்திய சரக்கு வாகனத்தை சிறைபிடித்த பொதுமக்கள், ஓட்டுனர் உள்ளிட்ட இருவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இருவரும் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து மாணவர்களும் பொதுமக்களும் திரண்டு நான்கு வழி சாலை சந்திப்பில் மறியலில் ஈடுபட்டனர். வேகத்தடை அமைக்கவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். மறியல் காரணமாக ஈரோடு சித்தோடு-பவானி இடையே 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அதிரடிப் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர்.

Related Posts