அழகுலைஃப் ஸ்டைல்

சரும பிரச்சனைகளை தீர்க்கும் புதினா வெள்ளரிக்காவின் குணநலன்கள்

தற்காலத்தில் நமக்கு இருக்க பிஸியானா வாழ்கை முறையில நம்மளோட சருமத்தை கவனிக்கவே மறந்துறோம். நாம சருமத்தை கவனிக்காம விடுறதுனால நிறைய சரும பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கு. இதுனால சருமம் வறண்டு, சோர்வாகவும் மற்றும் வெடிப்புகளுடனும் காணப்படும். இந்த சரும பிரச்சனைகள் சூரியனின் புறஊதாக்கதிர்கள் மற்றும் மாசுகட்டுப்பாட்டினால் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த சரும பிரச்சனைகளை விலையுயர்ந்த க்ரிம் பயன்படுத்தி போக்க வேண்டிய அவசியம் இல்லை.

 

எளிதில் கிடைக்கும் பொருட்களை கொண்டு இயற்கையான முறையில் சரும பிரச்சனைகளை போக்கலாம். வெள்ளரிக்காய், உங்கள் முகத்தில் உள்ள கருமையை நீக்க மிக சிறந்த தீர்வாக அமையும். வெள்ளரிக்காய் மற்றும் அத்துடன் சில பொருட்களை சேர்ப்பதன் மூலம் முகத்தில் தோன்றும் கருமை மற்றும் கருந்திட்டுக்களை எளிதில் அகற்றலாம்.

 

உருளைக்கிழங்கு ப்ளீச்சிங் பண்புகளைக் கொண்டிருப்பதால் உங்கள் சருமத்தை வெள்ளையாக்க உதவும். ஒரு முழு உருளைகிழங்கின் சாறு மற்றும் அரை வெள்ளரிக்காயின் சாறை எடுத்து இரண்டையும் நன்றாக கழுவிக் கொள்ளுங்கள். ஒரு காட்டன் பஞ்சு எடுத்து அந்த கலவையில் நனைத்து முகத்தில் தேயுங்கள். சிறிது நேரம் காய விட்டு பின்னர் கழுவுங்கள்.

 

முதலில் பால் பவுடர் எடுத்துக் கொள்ளுங்கள். பால் பவுடர் மற்றும் வெள்ளரி சாறு சேர்த்து ஒரு கலவை உருவாக்குங்கள். இந்த கலவை பார்ப்பதற்கு பேஸ்ட் போன்று இருக்கும். இந்த பேஸ்ட்டை எடுத்து முகம் மற்றும் கழுத்தில் தடவுங்கள். பேஸ்ட் காய்ந்ததும் சருமத்தை மெதுவாக மசாஜ் செய்து கொண்டே வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள். தேவையானால் இதனுடன் ஒரு முட்டையின் வெள்ளைகருவை சேர்த்துக் கொள்ளுங்கள். இதனை வாரத்திற்கு ஒரு முறை செய்யலாம்.

 

புதினா இலைகள் மற்றும் வெள்ளரிக்காய் மூலம் முக கருமையை நீக்கலாம். புதினா இலைகள் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. சிறிது புதினா இலைகள் மற்றும் சில வெள்ளரிக்காய் துண்டுகளை மிக்ஸியில் இட்டு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்யை முகத்தில் மாஸ்க்காக போட்டு அரை மணி நேரம் விட்டு, பின்னர் வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவுங்கள். முகத்தில் இருக்கும் கருமை நீங்கி முகம் பளபளக்கும். வாரத்தில் நான்கு முறை இதைச் செய்யலாம்.

 

முதலில் இரண்டு தேக்கரண்டியளவு வெள்ளரிக்காய்ச் சாறு இரண்டு தேக்கரண்டியளவு கற்றாழை ஜெல் மற்றும் இரண்டு தேக்கரண்டியளவு தயிர் எடுத்துக் கொள்ளுங்கள். இதை முகம் மற்றும் கழுத்து முழுவதும் தடவவுங்கள். அரை மணி நேரம் அப்படியே விட்டுவிட்டு பின்னர் கழுவுங்கள். இதனை வாரத்திற்கு மூன்று முறை பின்பற்றலாம்.

 

உங்களுக்கு தயிர் சேர்க்க விருப்பம் இல்லையெனில் ஓட்ஸ் சேர்த்துக் கொள்ளலாம். ஒரு மிக்ஸியில் வெள்ளரி, கற்றாழை மற்றும் ஓட்ஸ் கலந்து அரைத்து கொள்ளுங்கள். இந்த கலவையை முகம் மற்றும் கழுத்தில் அரை மணி நேரம் விட்டு வட்ட வடிவில் மசாஜ் செய்து கழுவுங்கள். இந்த முறையை வாரத்திற்கு ஒரு முறை செய்தால் போதுமானது.

கடலை மாவு முகத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய்யை உறிஞ்ச உதவுகிறது. மேலும் சருமத்தில் உள்ள துளைகளை அகற்றுகிறது. முகத்தில் உள்ள அசுத்தங்கள் மற்றும் அழுக்குகளை நீக்குகிறது. வெள்ளரிக்காய் சாறு மற்றும் கடலை மாவு சம அளவு கலந்து முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவவும். அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவுங்கள். கழுவும் முன்பு மசாஜ் செய்து விட்டு கழுவுவது நல்லது. இந்த முறையை நீங்கள் ஒரு நாள் விட்டு மறுநாள் என்று பின்பற்றலாம்.

 

 

வெள்ளரிக்காயுடன் தேன் சேர்த்து பயன்படுத்துவதன் மூலம் முகத்தில் ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும். தேன் உங்கள் முகத்திற்கு பிரகாசத்தை அளிக்க உதவும். வெள்ளரிக்காய்ச் சாறை தேனுடன் கலந்து முகத்தில் மெதுவாக மசாஜ் செய்யுங்கள். ஐந்து நிமிடங்கள் மசாஜ் செய்து, அரை மணி நேரம் விட்டுவிடுங்கள். இதனை வாரம் இரண்டு முறை செய்யலாம்.

கருமை நீக்க

சருமத்தில் உள்ள கருமையை நீக்க பொதுவான சில குறிப்புகள்.

சிறந்த முடிவுகளை நீங்கள் விரைவில் பெற விரும்பினால் வெள்ளரிக்காய் சாற்றை தினமும் குடிக்கவும்.

கடைகளில் விற்கப்படும் சாறு அல்லது வீட்டில் தயார் செய்து பாட்டில்களில் அடைத்து குடிக்கும் பழக்கத்தை தவிர்த்து வீட்டில் தயாரித்த உடன் பருகுவதே சிறந்தது.

சன்ஸ்கிரீன் பயன்படுத்தாமல் வெயிலில் செல்ல வேண்டாம்.

அதிக தண்ணீர் குடிக்கப்பழகிக் கொள்ளுங்கள். குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு எட்டு கிளாஸ் தண்ணீர் குடிங்கள்.

உங்கள் உணவில் அடிக்கடி வெள்ளரிக்காய் சேர்த்துக் கொள்ளுங்கள்.

மேக்கப் போட்டு இருந்தால் அத்துடன் படுக்கைக்குச் செல்வதைத் தவிருங்கள். படுக்கைக்கு செல்லும் முன்பு மேக்கப் களைத்து விட்டு உறங்குங்கள்.

சருமத்தை பாதுகாக்க எப்போதும் இயற்கையான வழியில் செல்லுங்கள்.

Tags
Show More

Related News

Back to top button
Close