சர்வதேச அளவில் இந்தியாவுக்கு 34ஆவது இடம்

சர்வதேச அளவில், பயண மற்றும் சுற்றுலா போட்டித்திறன் பட்டியலில் இந்தியா 34ஆவது இடத்தை எட்டியுள்ளது.

உலக பொருளாதார மன்றம் இந்த அட்டவணையை வெளியிட்டுள்ளது. ஒரு நாட்டின் பயணம் மற்றும் சுற்றுலாத்துறையின் நிலையான வளர்ச்சிக்கான காரணிகள் மற்றும் கொள்கைகளையும், அதன் மூலம் நாட்டின் வளர்ச்சி மற்றும் போட்டித்திறன் மேம்படுவதை அடிப்படையாக கொண்டும் 140 நாடுகள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இதில் 2017-ல் 40-வது இடத்திலிருந்து இந்தியா, 2019-ல் 36-வது இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.6 சதவீதமும், வேலைவாய்ப்பில் 5.1 சதவீதமும் சுற்றுலா துறையின் மூலம் கிடைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் முதல் இடத்தை ஸ்பெயின் பிடித்துள்ளது. அடுத்தடுத்து இடங்களில் பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஆகிய நாடுகள் உள்ளன. ஆசிய பசிபிக் நாடுகள் இதில் வேகமாக வளர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் பாகிஸ்தான் 121ஆவது இடத்தில் உள்ளது.

Related Posts