சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கடிதம்

உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்க பாகிஸ்தானுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கடிதம் எழுத இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகக் கோப்பைப் போட்டியில் ஜுன் 16-ம் தேதி  இங்கிலாந்தின் மான்செஸ்டரில் நடைபெறும் ஆட்டத்தில்  இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. இந்நிலையில் காஷ்மீர் புல்வாமாவில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலையடுத்து இந்த ஆட்டம் திட்டமிட்டபடி நடைபெறுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. அரசின் முடிவைப் பொறுத்தே இந்த ஆட்டம் நடைபெறுமா இல்லையா என்று சொல்லமுடியும் என ஐபில் தலைவர் ராஜிவ் சுக்லா கூறியுள்ளார். ஆனால், உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடக்கூடாது என்று ஹர்பஜன் சிங் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளார்கள். இந்நிலையில் இந்த விவகாரத்தை முன்வைத்து உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து பாகிஸ்தானை அப்புறப்படுத்தவேண்டும் என்றுகவுன்சிலுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் கடிதம் எழுதவுள்ளதாக. நிர்வாகக் குழுத் தலைவர் வினோத் ராய், வாரியத் தலைமைச் செயல் அதிகாரி ராகுல் ஜொஹ்ரிக்கு  தனிப்பட்டமுறையில் கடிதம் எழுதியுள்ளார். தொடர் தீவிரவாதச் செயல்களில் பாகிஸ்தான் ஈடுபடுவதால் பாகிஸ்தான் அணி உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்கத் தடை விதிக்கவேண்டும் என்று கவுன்சிலுக்கு  கடிதம் எழுதவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.  வினோத் ராயின் கோரிக்கை குறித்து வெள்ளியன்று நடைபெறவுள்ள வாரியக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது.

 

Related Posts