சர்வதேச சிறப்பு ஒலிம்பிக் கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளித்து கௌரவிக்கப்பட்டது

சர்வதேச சிறப்பு ஒலிம்பிக் கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளித்து கௌரவிக்கப்பட்டது.

சென்னையில் உள்ள ஜவகர்லால் நேரு விளையாட்டு அரங்கில் கடந்த 3 ம் தேதி தொடங்கிய சிறப்பு குழந்தைகளுக்கான  சர்வதேச ஒலிம்பிக் கால்பந்து போட்டி குழந்தைகளின் திறன் அடிப்படையில் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடைபெற்றது. இதன் இறுதி போட்டியில் மூன்று பிரிவுகளிலும் வென்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா இன்று மாலை நேரு விளையாட்டரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு ஒலிம்பிக் சர்வதேச கால்பந்து சாம்பியன்ஷிப் 2019 போட்டியின் தலைவர் டாக்டர் அமர் பிரசாத் ரெட்டி, அழகப்பா பல்கலைகழக துணை வேந்தர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பரிசினை வழங்கினர்.

அடுத்த ஆண்டு சென்னை, டெல்லி,  மும்பை ஆகிய இடங்களில் பிராந்திய அளவிலான கால்பந்து போட்டி நடத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் இதில் கலந்து கொள்ள 33 நாடுகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

Related Posts