சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டி – தங்கம் வென்றார் ஹீனா சித்து

ஜெர்மனியில் நடைபெற்ற ஹனோவர் சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய வீராங்கனை ஹீனா சித்து தங்கம் வென்றார்.

ஜெர்மனி : மே-15

ஜெர்மனி நாட்டின் முனிச் நகரில் வரும் 22 முதல் 29-ஆம் தேதி வரை உலக துப்பாக்கி சுடும் போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்த போட்டிக்காக இந்திய துப்பாக்கி சுடும் வீரர்கள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில், ஜெர்மனியின் ஹனோவர் நகரில் சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது. இதில், 10 மீட்டர் ஏர்பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை ஹீனா சித்துவும், பிரான்ஸ் வீராங்கனை மதில்டே லமோலும் பங்கேற்றனர். இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்ட ஹீனா சித்து, தங்கப்பதக்கம் வென்றார். ஹீனா சித்து ஏற்கனவே காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts