சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்த மனித உருவிலான ரோபோ

விண்வெளிக்கு ரஷ்யா முதல் முறையாக அனுப்பிய மனித உருவிலான ரோபோ சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்தது.

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ரஷ்யா கடந்த 22ம் தேதி முதல் முறையாக ஃபெடார் என்ற மனித ரோபோவை அனுப்பியது. விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்களுக்கு அவசர காலங்களில் உதவி செய்வதற்காக, இந்த ரோபோ அனுப்பி வைக்கப்பட்டது. ரோபோவை சுமந்து சென்ற விண்கலம், 24ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்தின் அருகே சென்றது. ஆனால், சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக விண்கலத்தை சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைக்கும் முயற்சி தோல்வி அடைந்தது. அந்த கோளாறுகள் சரிசெய்யப்பட்டு, மீணடும் விண்வெளி நிலையத்துடன் விண்கலம் வெற்றிகரமாக இணைக்கப்பட்டது. அதிலிருந்த மனித ரோபோ விண்வெளி நிலையத்திற்குள் கொண்டு செல்லப்பட்டது. மனித ரோபோ விண்வெளி நிலையத்தை அடைந்திருப்பதாக நாசாவும் உறுதி செய்துள்ளது. ஸ்கைபோட் எஃப் 850 என்ற அடையாள எண்ணுடன் அனுப்பப்பட்டுள்ள இந்த ரோபோ, சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்களுக்கு உதவி செய்ய உள்ளது.

Related Posts