சர்வதேச ஹாக்கி போட்டியில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணி ‘சாம்பியன்’

ஜப்பானில் நடந்த சர்வதேச ஹாக்கி போட்டியில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணி ‘சாம்பியன்’ பட்டத்தை கைப்பற்றியது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் டெஸ்ட் பந்தயம் என்ற பெயரில் சர்வதேச ஹாக்கி போட்டி நடைபெற்றது. இதில் ஆண்கள் பிரிவு இறுதி ஆட்டத்தில், இந்திய அணி, நியூசிலாந்தை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 5-0 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை பந்தாடி சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது. பெண்கள் பிரிவில் நடந்த இறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள இந்திய அணி, 14-வது இடத்தில் இருக்கும் ஜப்பானை சந்தித்தது. கடைசி கட்டத்தில் ஜப்பான் அணிக்கு அடுத்தடுத்து பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

Related Posts