சர்வாதிகார ஆட்சியை இந்தியாவில் அமைக்க மோடி முயற்சி : கே.எஸ். அழகிரி குற்றம்சாட்டு

ராணுவத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து சர்வாதிகார ஆட்சியை இந்தியாவில் அமைக்க மோடி முயற்சி செய்வதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார். திமுகவின் காஷ்மீர் எதிர்ப்பு போராட்டத்தில் காங்கிரஸ் கட்சி பங்கேற்கும் என்று அவர் தெரிவித்தார். முன்னதாக மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் 75 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ராஜீவ்காந்தி திருவுருவ சிலைக்கு கே.எஸ் அழகிரி மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

Related Posts