சளி, இருமலுக்கு இதம் அளிக்கும் தூதுவளை சூப்

தூதுவளை வேலிகளில் வளரும் அற்புத மூலிகை கொடி.சிறு முட்கள் நிறைந்து இதன் இலை காணப்படும். பூ, காய், வேர் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டது. தொடர்ந்து மாறிவரும் பருவமாற்றதினால் ஏற்படும் சளி இருமல் முதலியவற்றிற்கு இதம் அளிக்ககூடியது.

சளி, இருமல் நேரங்களுக்கு ஏற்ற  தூதுவளை சூப் செய்முறையை தெரிந்து கொள்ளலாமா!

தேவையான பொருட்கள்:

தூதுவளை இலை – 1 கப்

புளி – சிறிய அளவு

சீரகம் – 1 ஸ்பூன்

மிளகு – 2 ஸ்பூன்

கொத்தமல்லி – அரை ஸ்பூன்

பூண்டு – 5 பல்

துவரம் பருப்பு – 1 ஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 2

பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

கடுகு – 1 ஸ்பூன்

மல்லி இலை , கருவேப்பிலை – சிறிதளவு

எண்ணெய் – 1 ஸ்பூன்

செய்முறை:

முதலில், ஒரு பாத்திரத்தில் புளியைக் கரைத்து தண்ணியை வடிகட்டி வைக்க வேண்டும்.

பின்னர், மிக்ஸியில் சீரகம், மிளகு, துவரம் பருப்பு, காய்ந்த மிளகாய், கொத்தமல்லி ஆகியவற்றை அரைத்து அதனுடன் புளிதண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.

பின்னர், அதில் தூதுவளை மற்றும் பூண்டை அரைத்து அதனுடன் சேர்த்து , 2 நிமிடம் கொதிக்க விட வேண்டும். இறுதியாக, ஒரு கடாயில் எண்ணெய் அதில் கடுகை போட்டு தாளித்து, சூப்பில் கொட்டவும்.

சளி, இருமலுக்கு இதம் அளிக்கும் தூதுவளை சூப் தயார்

Related Posts