சவுதி அரேபியாவில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்ட 37 பேருக்கு மரண தண்டனை

இஸ்லாமிய ஷரியத் சட்ட விதிமுறைகளைப் பின்பற்றும் நாடான சவுதி அரேபியாவில் தீவிரவாதம் தொடர்பான குற்றங்களுக்கு எதிராக கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தீவிரவாதத்துடன் தொடர்புடைய பல்வேறு செயல்களில் ஈடுபட்டதான  குற்றச்சாட்டில் அந்நாட்டை சேர்ந்த 37 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடைபெற்ற தீவிர விசாரணையில் அவர்கள் பயங்கரவாத கொள்கைகளை தீவிரமுடன் பின்பற்றி வந்ததுதெரிந்தது.

விசாரணையின் முடிவில் அவர்கள் அனைவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றுவது என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து 37 பேருக்கு நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது..

Related Posts