சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட விதிக்கப்பட்டிருந்த தடை இன்றுடன் முடிவு

சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட விதிக்கப்பட்டிருந்த தடை இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளதால், அந்நாட்டு பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சவுதி அரேபியா : ஜூன்-24

இஸ்லாமிய நாடான சவுதி அரேபியிவில் பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் இருந்த நிலையில், பட்டத்து இளவரசராக முகமது பின் சல்மான் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பல்வேறு சீர்த்திருத்தங்களை அறிமுகம் செய்து வருகிறார். சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. கேளிக்கை நிகழ்ச்சிகளில் பெண்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளது. விளையாட்டுப் போட்டிகளை பெண்கள் நேரில் சென்று பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தற்போது கார் ஓட்ட அனுமதி வழங்கியுள்ளது. சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் இன்று முதல் பெண்கள் கார் ஓட்டத் தொடங்கியுள்ளனர். பெண்களுக்கு தன்னம்பிக்கையை கொடுக்கும் வகையில் கார் ஓட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related Posts