சவுதி – பாகிஸ்தான் இடையே பல கோடி ரூபாய் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

சவுதி இளவரசரின் பாகிஸ்தான் பயணத்தின்போது  இரு நாடுகளுக்கிடையே பல கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 சவுதி நாட்டின் இளவரசர் முகமது பின் சல்மான் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இந்த வார இறுதிக்குள் பாகிஸ்தான் செல்கிறார். பாதுகாப்பு காரணங்களினால்  இளவரசரின் சுற்றுப்பயணத் தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..இதையடுத்து 5 டிரக்குகளில் இளவரசரின் பயிற்சி சாதனங்கள், மரப்பொருட்கள், நாற்காலி  மற்றும் அவர் பயன்படுத்தும் பொருட்கள் பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த பொருட்கள் அனைத்தும் நேற்று இஸ்லாமாபாத்தை  அடைந்தன. சவுதி இளவரசரின் பாதுகாப்பு குழுவினர் மற்றும் சவுதி பத்திரிக்கையாளர்களும் வந்துள்ளனர். முகமது பின் சல்மான் பாகிஸ்தானுக்கு இளவரசராக வருகை தர இருப்பது இதுவே முதல் முறையாகும். முன்னதாக பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தபோது, ஏமன் உள்நாட்டுப் போர் தொடங்கிய காலத்தில் பாகிஸ்தானுக்கு சென்று இருந்தார். சவுதி இளவரசரின் தற்போதைய சுற்றுப்பயணத்தின்போது, பிரதமர் இம்ரான் கான் மற்றும் ராணுவ அதிகாரிகளை சந்திக்க உள்ளார். அப்போது இரு நாடுகளுக்கிடையே பல கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. .

Related Posts