சாம் பிட்ரோடா மன்னிப்பு கேட்க வேண்டும்:  ராகுல் காந்தி 

காங்கிரஸ் மூத்த தலைவர் சாம் பிட்ரோடா, சீக்கியர் படுகொலை பற்றிய கேள்விக்கு “அது 1984-ல் நடந்த சம்பவம், அதற்கு என்ன?” என்று கேட்டதை, பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் விமர்சித்தனர்.  குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி, “காங்கிரஸ் கட்சியை நடத்துபவர்களின் ஆணவம் எப்படி இருக்கிறது என்பதை இந்த வார்த்தைகள் மூலம் புரிந்து கொள்ளலாம் எனவும் அக்கட்சியின் மனநிலையையும், குணநலனையும் இது காட்டுவதாகவும் கடுமையாக சாடினார். இந்த விவகாரம் குறித்து தனது  முகநூல் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ள ராகுல் காந்தி, “சாம் பிட்ரோடாவின் கருத்து ஒரு நாளும் ஏற்றுக் கொள்ள முடியாதது எனவும், தனது கருத்துகளுக்காக பிட்ரோடா மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

அந்த கலவரத்துக்கு யார் பொறுப்பாக இருந்தாலும் அவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும் எனவும்,  இந்த விவகாரம் குறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தனது தாய் சோனியா காந்தி,  உட்பட அனைவரும் விளக்கம் அளித்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். . 1984 ஆம் ஆண்டு சீக்கிய கலவரம் என்பது மிக மோசமான நிகழ்வு எனவும், அது நடந்திருக்கக் கூடாது’ என்றும் அவர் கூறியுள்ளார். மத்திய அரசு தரப்பில் 2000  ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட நானாவதி ஆணையம், 1984 ஆம் ஆண்டு சீக்கிய கலவரத்துக்கும் அப்போது பிரதமராக இருந்த ராஜீவ் காந்திக்கும் தொடர்பு இருப்பதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Posts