சாலையில் திடீரென விழுந்த மரம்- அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய ஹேம மாலினி

உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் ஹேம மாலினியின் வாகன அணிவகுப்பின்போது சாலையில் மரம் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரா :  மே-14

கடந்த சில நாட்களாக வட மாநிலங்களில் புழுதி புயல் வீசி வருகிறது. இந்த புழுதி புயலினால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளதோடு, பலர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் நேற்று கனமழையுடன் கூடிய புழுதி புயல் ஏற்படுத்திய பாதிப்பில் நேற்று குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்துள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் மட்டும் 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா அருகே உள்ள ஒரு கிராமத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக அத்தொகுதியின் பா.ஜ.நாடாளுமன்ற உறுப்பினர் ஹேமமாலினி தனது ஆதரவாளர்ளுடன் சென்றார். அப்போது, அந்த சாலையில் திடீரென ஒரு மரம் சாய்ந்து விழுந்தது.

எனினும், ஹேமமாலினி உட்பட அவருடன் பயணம் செய்தவர்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இந்த சம்பவத்தால் ஹேம மாலினியின் பயணம் சற்று தாமதம் ஆனது.

Related Posts