சிகரெட், பட்ஸ் உள்ளிட்ட 12 பொருட்களுக்கு தடை விதிக்க ஆலோசனை

சிகரெட், பட்ஸ் உள்ளிட்ட 12 பொருட்களுக்கு தடை விதிக்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது

ஒரு முறை மட்டுமே உபயோகிக்பப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2 ஆம் தேதி முதல் இந்த திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், சிறிய பிளாஸ்டிக் பாட்டில்கள், அலங்கார பொருட்கள் மற்றும் சிகரெட் பட்ஸ்களில் பயன்படுத்தப்படும் தெர்மோகோல் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. பிளாஸ்டிக் கரண்டிகள், பவுல்கள், பிளாஸ்டிக் கொடிகள், சிகரெட் பட்ஸ்கள், பேனர்கள்  உள்ளிட்ட பொருட்களும் தடைசெய்யப்பட வேண்டிய பிளாஸ்டிக் பட்டியலில் இடம்பிடித்துள்ளன.

Related Posts