சிகிச்சைக்காக இங்கிலாந்து செல்கிறார் பும்ரா

முதுகில் ஏற்பட்டுள்ள காயத்துக்கான சிகிச்சைக்காக, இந்திய வேகப் பந்துவீச்சாளர் பும்ரா, இங்கிலாந்து செல்ல இருக்கிறார்.

இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நாளை தொடங்குகிறது. முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இந்தத் தொடரிலிருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் சிகிச்சைக்காக இங்கிலாந்து செல்ல இருக்கிறார். அவருடன் இந்திய தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைமை பிசியோதெரபிஸ்ட் ஆஷிஷ் கவுசிக்கும் செல்ல உள்ளார்.

Related Posts