சிகிச்சையின்போது ஜெயலலிதா கைப்பட எழுதிய உணவுப்பட்டியல் வெளியீடு

Want create site? Find Free WordPress Themes and plugins.

சென்னை அப்போலோ மருத்துவமனையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது தனக்கு என்ன வகை உணவுகள் வேண்டும் என கைப்பட எழுதிய பட்டியலை விசாரணை ஆணையத்தில் மருத்துவர் சிவக்குமார் இன்று தாக்கல் செய்தார்.

சென்னை : மே-26

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், இன்று ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், சிறப்பு அதிகாரியாக இருந்த சாந்தஷீலா நாயர், குடும்ப மருத்துவர் சிவக்குமார், ஆளுநர் மாளிகை அலுவலக ஊழியர் சீனிவாசன் ஆகியோர் இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜராகினர்.  இவர்கள் ஒவ்வொருவரிடமும் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தினார்.

இந்த விசாரணையில், சர்க்கரை நோயாளியான ஜெயலலிதாவுக்கு ஒரே நாளில் 3 வகை இனிப்புகளும், அவ்வப்போது பழச்சாறுடன் கூடிய மில்க் ஷேக்-கும் வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் 2-ம் தேதியன்று தனக்கு என்ன வகை உணவுகள் தேவை என அவரே கைப்பட எழுதியதாக ஒரு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலை மருத்துவர் சிவக்குமார் இன்று விசாரணை ஆணையத்தில் சமர்ப்பித்தார். அந்த பட்டியலில் 2016 ஆகஸ்ட் 2 என தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அன்றைய தினம் ஜெயலலிதாவின் உடல் எடை, 106.9 கிலோ என குறிப்பிடப்பட்டுள்ளது.  காலை 5.05 மணி முதல் 5.35 மணி வரை, காலை உணவாக   இட்லி, பிரெட், காபி ஆகியவை வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இளநீர், கிரீன் டீ, ஆப்பிள், பிஸ்கட், இளநீர் ஆகியவை காலை உணவாக எடுத்துக் கொண்டது போன்று குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. காலை 5.45 மணியளவில் கிரீன் டீ  சாப்பிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. காலை 8 மணியளவில் ரிவைவ் எனப்படும் குளிர்பானம் சாப்பிட்டதாகவும், 8.55 மணியளவில் ஆப்பில் ஒன்றும், 9.40 மணியளவில் காபி குடித்ததாகவும் 5 பிஸ்கட்கள் சாப்பிட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

காலை 11.30 மணியளவில் பாஸ்மதி அரிசியில் சமைக்கப்பட்ட ஒரு கப் சாதம் சாப்பிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற்பகல் 2 மணி முதல் 2.35 மணி வரை மதிய உணவாக ஒன்றரை கப் பாஸ்மதி சாதம், 1 கப் யோகர்ட் எனப்படும் பானம், அரை கப் மஸ்க் மிலன் பலச்சாறு சாப்பிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலை 5.45 மணியளவில் 200 மில்லி காபி சாப்பிட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மாலை 6.30 மணி முதல் 7.15 மணி வரை அரை கப், வாதுமை கொட்டை மற்றும் உலர் பழங்கள், 1 கப் இட்லி உப்மா, தோசை ஒன்று, 2 துண்டு பிரெட், 200 மில்லி பால், ஆகியவை சாப்பிட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. உணவுடன் மிக்னர் எனப்படும் மருந்து 50 மில்லி ,  ஜானுவியா எனப்படும் மருந்து 100 மில்லி சாப்பிட்டதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

                                                                                   

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Related Posts