சிங்கப்பூரில் ஜூன் 12ம் தேதி ட்ரம்ப் – கிம் ஜோங் உன் சந்திப்பு

 

 

அமெரிக்க அதிபர் டிரம்ப் – வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் முதல் முறையாக சந்திக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு சிங்கப்பூரில் ஜூன் 12ம் தேதி நடக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோர் நேருக்குநேர் சந்தித்துப் பேச, கடந்த சில நாட்களாக ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த சந்திப்பு நடைபெறும் தேதி மற்றும் இடம் ஆகியவை குறித்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதன்படி, சிங்கப்பூரில் அடுத்த மாதம் 12ம் தேதி வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னை சந்திக்கவுள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது, உலக அமைதிக்கான ஆக்கபூர்வமான சந்திப்பு என குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், இந்த சந்திப்பால், வடகொரியா, தென்கொரியா இடையேயான போர் பதற்றம் நிரந்தரமாக முடிவுக்கு வரும் என நம்பிக்கை தெரிவித்தார்.
https://twitter.com/realDonaldTrump/status/994587349718847489

Related Posts