சித்திரை திருவிழாவையொட்டி, கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார்

சித்திரை விழாவையொட்டி கள்ளழகர் தங்கப் பல்லக்கில் மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் இருந்து பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவிலில் விடைபெற்று மதுரைக்கு புறப்பட்டார். தொடர்ந்து பொய்கைகரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப்பதி உள்பட பல மண்டபங்களில் கள்ளழகர் எழுந்தருளி அருள்பாலித்தார்.

இதையடுத்து இன்று காலை 5.45 மணிக்கு மேல் தங்ககுதிரை வாகனத்தில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் சூடிய மாலை, கிளி, பரிவட்டம் உள்ளிட்டவைகள் கள்ளழகருக்கு சாற்றப்பட்டது. சித்திரை திருவிழாவையோட்டி பல்வேறு மாவட்டங்களில் இருந்து மதுரைக்கு மக்கள் குவிந்த்தால் மதுரை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. கள்ளழகர் வைகையாற்றில் இறங்கியதையொட்டி பலத்த பாதுகாப்பு போட்ப்பட்டுள்ளதுடன் போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டன

Related Posts