சின்னதம்பிக்கு உணவுகளை கொடுத்து, ஏன் காட்டுக்குள் அனுப்பக் கூடாது? 

Want create site? Find Free WordPress Themes and plugins.

காட்டுயானை சின்னதம்பிக்கு இயற்கை உணவுகளை கொடுத்துப் பழக்கி, ஏன் மீண்டும் காட்டுக்குள் அனுப்பக் கூடாது? என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

காட்டுயானை சின்னதம்பியை பிடித்து முகாமில் வைத்து பராமரிக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், அதன் நடமாட்டம் குறித்து நேற்று தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்தது. இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் அடங்கிய அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி சின்னதம்பி யானையை முகாமுக்கு அனுப்புவது தொடர்பாக நாளை விரிவான விளக்கம் அளிக்கப்படும் என்று கூறினார். எனவே விசாரணையை நாளைக்கு தள்ளிவைக்க வேண்டும் எனவும், நாளை யானைகள் நிபுணர் அஜய் தேசாய் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிப்பார் என்றும் விஜய் நாராயண் தெரிவித்தார். இதைக் கேட்ட நீதிபதிகள் சின்னதம்பி யானைக்கு இயற்கை உணவுகளை கொடுத்து பழக்கி ஏன் மீண்டும் காட்டுக்குள் அனுப்ப கூடாது என கேள்வி எழுப்பினர். தற்போது விவசாய நிலத்தில் உள்ள பயிர்களை உண்பதால், அது வனப்பகுதிக்கு செல்லாமல் உள்ளதா? எனவும் நீதிபதிகள் வினவினர்.சின்னதம்பி யானையின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை நாளைக்குஒத்தி வைத்தனர்.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Related Posts