சின்னதம்பியை பிடிக்க முயற்சி: வனத்துறையினர் நடவடிக்கை

திருப்பூர் மாவட்டம் கண்ணாடிப்புத்தூர் கரும்பு தோட்டத்தில் உள்ள காட்டுயானை சின்னதம்பியை பிடிக்கும் நடவடிக்கையை வனத்துறையினர் தொடங்கியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் கிருஷ்ணாபுரத்தில் இருந்து இடம் பெயர்ந்த காட்டுயானை சின்னதம்பி தற்போது கண்ணாடிப்புத்தூர் கிராமத்தில் உள்ளஒரு கரும்புத் தோட்டத்தில் முகாமிட்டுள்ளது. கடந்த 15 நாட்களாக வனத்துறையினரை அலைக்கழித்து வரும் சின்னதம்பியை, காயம் எதுவுமின்றி  பிடிக்க வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து கண்ணாடிப்புத்தூர் கரும்புத் தோட்டத்தில் முகாமிட்டுள்ள சின்னதம்பியை பிடிப்பதற்கான நடவடிக்கையை வனத்துறையினர் தொடங்கியுள்ளனர். பள்ளப்பகுதியில் உள்ள கரும்பு தோட்டத்திலிருந்து யானை மேலே ஏறுவதற்கு வசதியாக மேடான பகுதியை சமன்படுத்த இரு ஜேசிபி எந்திரங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.  வனத்துறையினர் மற்றும். கால்நடை மருத்துவர்கள் அங்கு முகாமிட்டுள்ளனர்.  ஒருவேளை யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க அவசியம் ஏற்பட்டால், அதை செய்வதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது

Related Posts