சிறப்பு அதிகாரி என்ற பதவியை முதல்வர் பதவியாக மாற்றி அமைத்திட வேண்டும்

7வது ஊதியக்குழுவில் உள்ள முரண்பாடுகளை களைந்து ஒரு நபர் குழு மூலம் அமல்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு பட்டய பொறியாளர்கள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

அந்தச் சங்கத்தின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் கோவையில் காந்திபுரத்தில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் விஜய முருகன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் , மகளிர் தொழிற்பயிற்சி நிலையங்களில் தற்காலிகமாக இருக்கும் தொழில் நுட்ப பதவிகளை நிரந்தர பதவிகளாக மாற்ற வலியுறுத்தப்பட்டது. அரசினர் தொழிற்பயிற்சி நிறுவனங்களில் சிறப்பு அதிகாரி என்ற பதவியை முதல்வர் பதவியாக மாற்றி அமைத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Posts