சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளதால் காஷ்மீர் மக்கள் பலனடைவார்கள் : ராம்நாத் கோவிந்த்

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளதால் காஷ்மீர் மக்கள் மகத்தான பலனடைவார்கள் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

நாட்டின் 73வது சுதந்திர தினத்தை ஒட்டி நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். அப்போது அவர், 72 ஆண்டுகளாக சுதந்திரத்தை அனுபவித்து வரும் நிலையில் நாடு முக்கிய இடத்தை எட்டிப்பிடித்து உள்ளது என்று தெரிவித்தார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளதன் மூலம் அந்த மாநில மக்கள், நாட்டின் பிற மாநில மக்களை போலவே அனைத்து உரிமைகளையும், சலுகைகளையும் பெற முடியும் என்று தாம் நம்புவதாக அவர் கூறினார்.

மக்களவைக்கு நடைபெற்ற பொதுத்தேர்தலை சுட்டிக்காட்டிய அவர், உலகின் பிரமாண்டமான ஜனநாயக கடமையை ஆற்றிய மக்களுக்கு நன்றி கூறுவதாக அவர் குறிப்பிட்டார்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப் பட்டதாக கூறிய அவர், அடுத்து வரும் கூட்டத்தொடர்களும் இதே போல சிறப்பாக செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Related Posts