சிறப்பு ஒலிம்பிக்கிற்கு அனைவரும் ஒத்துழைப்பு தந்து வெற்றி பெற செய்ய வேண்டும்: நடிகை வரலட்சுமி 

சென்னை நேரு விளையாட்டு அரங்கில் சிறப்பு ஒலிம்பிக்ஸ் அமைப்பு சார்பாக சிறப்பு ஒலிம்பிக் சர்வதேச போட்டிகள் வரும் ஆகஸ்ட் 03 முதல் 6 வரை 3  நாட்கள் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு நாடுகளிலிருந்து சிறப்பு மற்றும் மாற்று திறன் கொண்ட 200 ற்கும் மேற்பட்ட  குழந்தைகளுகான கலந்து கொண்டு விளையாடவுள்ளனர்

இது குறித்தான செய்தியாளர் சந்திப்பு தியாகராய நகரிலுள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக  நடிகையும் சமூக ஆர்வலருமான  வரலட்சுமி  கலந்து கொண்டு சிறப்பு ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஆடைகளை அறிமுகம் செய்து வைத்தார்…பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிறப்பு ஒலிம்பிக்கிற்கு அனைவரும் ஒத்துழைப்பு தந்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

Related Posts