சிறுபான்மையினருக்கு எதிரான எந்த முயற்சியையும் அதிமுக இரும்பு கரம் கொண்டு ஒடுக்கும்;முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உறுதி

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கன்னியாகுமரியில் பா.ஜ.க வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார். பின்னர் அங்கிருந்து அஞ்சு கிராம்ம், ராதாபுரம், வள்ளியூர், நாங்குநேரி, நெல்லை, மேலப்பாளையம், அம்பாசமூத்திரம், ஆலங்குளம், கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில் உள்ளிட்ட இடஙகளில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.

அப்போது பேசிய அவர், சிறுபான்மையினருக்கு எதிரான எந்த முயற்சியையும் அதிமுக அரசு இரும்பு கரம் கொண்டு ஒடுக்கும் என தெரிவித்தார்.

மத்தியில் நிலையான ஆட்சி ஏற்பட வேண்டும் என்பதற்காகவே பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளதாக கூறிய அவர், கொள்கை வேறு, கூட்டணி வேறு என்பதை சிறுபான்மையினர் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

Related Posts