சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தால் மரண தண்டனை: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்

 

 

12வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தால், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில், சட்டத் திருத்தம் கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

டெல்லி, ஏப்ரல்-20

இந்தியாவில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. காஷ்மீர் மாநிலம் கதுவாவில் 8 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை உள்ளிட்ட கொடூரமான சம்பவங்கள் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.  இந்நிலையில், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க உத்தரவிடக் கோரி    உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் சார்பில் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 12 வயதுக்குட்பட்ட சிறுமிகள் பாலியல் பலாத்கார வழக்கில், குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையான மரண தண்டனையை உறுதி செய்யும் வகையில், போக்சோ சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை வரும் 27-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Related Posts