சிறுவணிகர்களுக்கும், புதிய தொழில்முனைவோருக்கும் கடன் வழங்க அரசு நடவடிக்கை

சிறுவணிகர்களுக்கும், புதிய தொழில்முனைவோருக்கும் கடன் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லி : ஜூன்-27

மத்திய அரசின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களில் பயனடைந்தவர்களுடன், டெல்லியில் இருந்தவாறே நமோ ஆப் மூலம் பிரதமர் நரேந்திர மோடி இன்று கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், இதுவரை வங்கிக் கணக்குத் தொடங்காத ஏழைகளுக்கு வங்கிச் சேவை அளிக்கவும், சிறுவணிகர்கள், புதிய தொழில்முனைவோருக்கு கடன் வழங்கவும், அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார். அரசின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் ஏழை, எளியோருக்கு வாழ்வில் நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்ட மோடி, கோடிக்கணக்கான பெண்கள் வங்கிக் கணக்குத் தொடங்கியுள்ளதற்கு மகிழ்ச்சி தெரிவித்தார்.

Related Posts