சிறு குறு தொழில்களின் நலனுக்காக ஜி.எஸ்.டி.வரி எளிமையாக்கப்பட்டுள்ளது: பிரதமர் மோடி

கோவை கொடிசியா மைதானத்தில் கோவை நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் சி.பி.இராதாகிருஷ்ணன், பொள்ளாச்சி அதிமுக வேட்பாளர் மகேந்திரன், திருப்பூர் அதிமுக வேட்பாளர் ஆனந்தன், நீலகிரி அதிமுக வேட்பாளர் தியாகராஜன் ஆகியோரை ஆதரித்து பிரதமர் மோடி நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, மருதமலை முருகனுக்கு அரோகரா எனவும் கூறி தனது உரையை துவங்கினார். பாஜக ஆட்சியில் 18 ஆயிரம் கிராமங்களுக்கு மின்சாரம் வசதியும், 42 கோடி பேருக்கு பென்சன் உள்ளிட்ட திட்டங்களை கொண்டு வந்த்தாக அவர் தெரிவித்தார்.  முத்ரா வங்கி, குறைந்த வட்டியில் எளிய கடன் வசதி, 5 லட்சம் வரை ஆண்டு வருமானத்திற்கு வரிவிலக்கு உள்ளிட்டவற்றை அளித்துள்ளதாகவும் அவர் கூறினார். சபரிமலை விவகாரத்தில் பாரம்பரியத்தை கேரள அரசு சிதைப்பதாக சாடிய அவர், பாஜக கேரள மக்களுடன் உடனிருக்கும் என தெரிவித்தார். சிறு குறு தொழில்களின் நலனுக்காக ஜி.எஸ்.டி. வரி எளிமையாக்கப்பட்டு உள்ளதாகவும், நாட்டில் விசைத்தறியாக உயர்த்தப்பட்ட 2 லட்சம் கைத்தறிகளில் 66 சதவீதம் தமிழகத்தை சேர்ந்தவர்கள் எனவும் கூறினார். தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்ள நதிகள் இணைப்பிற்கு தனி அமைச்சகம் போன்ற வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், கொங்குநாடு முன்னேற்ற கழக தலைவர் பெஸ்ட் ராமசாமி, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

Related Posts