சிறையிலுள்ள தூத்துக்குடியைச் சேர்ந்த மீனவர்கள் 8 பேரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ஜெயக்குமார்

இலங்கை சிறையிலுள்ள தூத்துக்குடியைச் சேர்ந்த மீனவர்கள் 8 பேரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

 சென்னை ராயபுரத்தில் உலக மீனவர் தினவிழாவையொட்டி நடைபெற்ற நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியில்கலந்து கொண்ட  மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அதிமுக என்பது மூழ்கும் கப்பல் என செந்தில்பாலாஜி கூறியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், திமுக தான் பலவீனமாக உள்ளது எனவும்,  எனவேதான்  அவர்கள் ஆள் சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.  பழவேற்காட்டில் படகு சவாரிக்கு மீண்டும் அனுமதி அளிப்பது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார். இலங்கை சிறையிலுள்ள தூத்துக்குடியைச் சேர்ந்த மீனவர்கள் 8பேரை விடுதலை செய்ய தமிழக அரசின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

Related Posts