சிறை வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர்களை உடனே விடுவிக்க வேண்டும் : திருச்சி சிவா

ஜம்மு காஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள அந்த மாநில முன்னாள் முதலமைச்சர்களை உடனே விடுவிக்க வேண்டும் என திமுக எம்.பி. திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

டெல்லி ஜந்தர் மந்தரில் திமுக மக்களவைக் குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில், 14 எதிர்க்கட்சிகள் கலந்து கொண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஜம்மு காஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள அந்த மாநில முன்னாள் முதலமைச்சர்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தப்பட்டது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.பி. திருச்சி சிவா, ஜம்மு காஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Related Posts