சிலை கடத்தல் வழக்கில் முன் ஜாமீன் கோரி மனு

சிலை கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தொழிலதிபர் ரன்வீர்ஷா, அவரது தோழி கிரண் ரா ஆகியோர் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர்.
சிலை கடத்தல் மன்னன் தீனதயாளன் கொடுத்த தகவலின் அடிப்படையில், தொழிலதிபர் ரன்வீர்ஷாவின் சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில உள்ள வீடு மற்றும் பண்ணை வீடுகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட சிலைகள் மீட்கப்பட்டன. இதையடுத்து தொழிலதிபர் ரன்வீர்ஷாவின் தோழி, கிரண் ராவ் வீட்டில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனைகளில், மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 23 பழங்கால சிலைகள் கண்டுபிடிக் கப்பட்டுள்ளன. இந்த நிலையில் கிரண்ராவின் கே.சி.பி. சுகர்ஸ் நிறுவன பொதுமேலாளர் உட்பட 7 பேருக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
இதே போல் ரன்வீர்ஷாவும் இன்று கும்பகோணத்தில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது
இதனிடையே தந்தையின் சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்க குஜராத் சென்றுள்ளதால் ரன்வீர்ஷா இன்று ஆஜராக மாட்டார் என்றும், 10-ந்தேதியே ஆஜராவார் என்றும் அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். சிலை கடத்தல் வழக்குகளில் ரன்வீர்ஷாவும், கிரணும் கைது செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் தொழிலதிபர் ரன்வீர்ஷா மற்றும் அவரது தோழி கிரண் ஆகியோர் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.

Related Posts