சில்லரை வியாபாரிகள் ஓய்வூதியம்  பெற வரும் 9-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்

சில்லரை வியாபாரிகள் ஓய்வூதியம் பதிவு செய்வது குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஒன்றரைக் கோடி ரூபாக்குள் வணிகம் செய்யும் சில்லரை வியாபாரிகள் மற்றும் சுய தொழில் செய்பவர்கள் ஓய்யூதிய திட்டத்துக்கு தகுதியானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் 18 வயது முதல் 40 வயது வரை உள்ள வியாபாரிகள் இணைந்து கொள்ளலாம் என்றும், மாதாந்திர சந்தா தொகை, வயதிற்கேற்றாற்போல் 55 ரூபாயில் இருந்து 200 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. உறுப்பினர்கள் 60 வயதை அடைந்தவுடன் குறைந்தபட்சமாக மாதந்தோறும் மூவாயிரம் ரூபாய் ஓய்வூதியமாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக வரும் 9-ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Posts