சில நூறு ஆசிரியர்கள் மட்டும் வெற்றி பெற்று இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது : தொல். திருமாவளவன்

ஆசிரியர் தகுதி தேர்வில் 3 லட்சம் ஆசிரியர்கள் தேர்வு எழுதி சில நூறு ஆசிரியர்கள் மட்டும் வெற்றி பெற்று இருப்பது மிகவும் வேதனை அளிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார். கல்வித் திறன் மற்றும் ஆசிரியர்களின் தகுதியை அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

காஷ்மீர் பிரச்சனையை முன்வைத்து சென்னையில் ஆகஸ்ட் 30- ம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அவர் தெரிவித்தார். கூடங்குளம் அணு உலையை விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து எதிர்க்கும் எனவும் திருமாவளவன் கூறினார்.

Related Posts