சிவகங்கையில் 144 தடை உத்தரவு

மருதுபாண்டியர் குருபூஜை விழாவை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் முழுவதும் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

                சுதந்திர போராட்டத்தின்போது ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டு வீர மரணம் அடைந்த மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் தூக்கிலிடப்பட்ட திருப்பத்தூரில், வருகிற 24ம் தேதி அரசு சார்பில் நினைவு தினமும், 27ம் தேதி காளையார்கோவிலில் உள்ள அவர்களது சமாதியில் குருபூஜை விழாவும் நடைபெறவுள்ளது.

இதேபோல் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் 30ஆம் தேதி தேவர் குருபூஜை விழாவும் நடைபெறவுள்ளது. இந்த விழாக்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்களும் அரசியல் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் வந்து அஞ்சலி செலுத்துவது வழக்கம். இந்நிலையில் இன்று முதல் வரும் 31ஆம் தேதி வரை சிவகங்கை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவை, மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் பிறப்பித்துள்ளார்.

Related Posts