சிவகாசி பட்டாசு தொழில் முடங்கி, எட்டு இலட்சம் தொழிலாளர்கள் குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கும்அவலத்தைப் போக்க சுற்றுச் சூழல் அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்த்தனுடன் வைகோ சந்திப்பு

Want create site? Find Free WordPress Themes and plugins.

இது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சிவகாசி நகரத்திலும், அதைச் சுற்றிலும் உள்ள 1070 பட்டாசு தொழிற்சாலைகள் மூடப்பட்டு, எட்டு இலட்சம் தொழிலாளர் குடும்பங்களின் எதிர்கால வாழ்வே சூன்யமாகிவிட்டது.

சில நாட்களுக்கு முன்பு சிவகாசியில் உள்ள இந்தியன் பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் கலிங்கப்பட்டியில் என்னைச் சந்தித்து நிலைமையை எடுத்து விளக்கினார்கள். பட்டாசுத் தொழிலைப் பாதுகாக்க என்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் என்று உறுதி கூறினேன்.

பட்டாசுத் தொழில் குறித்த வழக்கில் 2018 அக்டோபர் 23 தேதி அன்றும், 31 ஆம் தேதி அன்றும் உச்சநீதிமன்றம் இரண்டு ஆணைகள் பிறப்பித்தன. வழக்கு நிலுவையில் உள்ளது.

உச்சநீதிமன்ற ஆணைகள் கூறுவதாவது:-

பட்டாசு உற்பத்தியையோ, விற்பனையையோ, பயன்படுத்துவதையோ நாங்கள் தடை செய்யவில்லை. ஆனால் சில நிபந்தனைகளை விதிக்கிறோம்.

  1. பசுமைப் பட்டாசுகள்தான் தயாரிக்க வேண்டும் (உலகத்தில் எங்கும் பசுமைப் பட்டாசு என்பதே கிடையாது. அதிர்ச்சி தருக்கின்ற ஆணையாகும்.)
  2. பட்டாசு உற்பத்தியில் பேரீயம் உப்பு பயன்படுத்தக்கூடாது. (பேரீயம் உப்பு பயன்படுத்தாமல், பட்டாசு உற்பத்தி செய்யவே முடியாது)
  3. சரவெடிகள் உற்பத்தி செய்யக்கூடாது ( 2005 இல் உச்சநீதிமன்றம் தந்த தீர்ப்பில் சரவெடிகள் உற்பத்தி செய்யலாம் என்று கூறி இருந்தது.)
  4. ஒரு நாளில் இரண்டு மணி நேரம்தான் பட்டாசுகளை வெடிக்கச் செய்யலாம் (தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்களில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பட்டாசுகள் வெடிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் முன்பு தீர்ப்பு அளித்திருந்தது. இந்தப் பின்னணியில் பட்டாசு உற்பத்தியைத் தடை செய்யவில்லை என்று கூறிக்கொண்டே, பட்டாசுகள் உற்பத்தி செய்ய முடியாத நிலையை நிபந்தனைகள் மூலம் உச்சநீதிமன்றம் ஏற்படுத்திவிட்டது.)

எனவே இதுகுறித்து பிப்ரவரி 7 ஆம் தேதி மாலை 5 மணிக்கு பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை அவரது அலுவலகத்தில் நானும், இந்தியன் பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் முன்னாள் செயலாளர் வெங்கடேசும், இந்நாள் இணைச் செயலாளர் ராஜப்பனும் சென்று சந்தித்தோம்.

ஏற்கனவே பட்டாசுத் தொழிலைப் பாதுகாக்க பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள்தான் உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகளை அழைத்துச் சென்று சுற்றுச் சூழல் அமைச்சர் ஹர்ஷவர்த்தன் அவர்களைச் சந்தித்து நிலைமையை எடுத்து விளக்கி இருக்கிறார். அதேபோல பிரதிநிதிகளை பிரதம அமைச்சக அதிகாரிகளிடமும் பேசுவதற்கு ஏற்பாடு செய்திருந்தார். அதனால்தான் நான் பாதுகாப்பு அமைச்சர் அவர்களைச் சந்தித்தேன்.

சுற்றுச் சூழல் அமைச்சர் ஹர்ஷவர்த்தன் அவர்களை அலைபேசியில் தொடர்புகொண்டு, வைகோ உங்களைச் சந்திக்க விரும்புகிறார் என்று கூறியவுடன், நாடாளுமன்றத்தில் உள்ள அமைச்சர் அலுவலகத்துக்கு இரவு 8 மணி அளவில் சந்திக்குமாறு அமைச்சர் கூறினார். அதன்படி நான் பட்டாசு தொழிலில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறித்தும், அவற்றைத் தவிர்ப்பதற்குத் தேவையான கோரிக்கையைச் சுட்டிக்காட்டியும் கோரிக்கை மனு தயாரித்து அமைச்சர் ஹர்ஷவர்த்தன் அவர்களை நிர்வாகிகளுடன் சென்று சந்தித்தேன்.

உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பட்டாசு தொழில் வழக்கு வருகிற மார்ச் 1 ஆம் தேதி விசாரணைக்கு வருவதால், மத்திய அரசு தரப்பிலிருந்து உச்சநீதிமன்ற நிபந்தனைகளைத் தளர்த்துவதற்கு உரிய வேண்டுகோளோடு மத்திய அரசு பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்ய ஆவன செய்யுமாறு கேட்டுக்கொண்டேன்.

உடனே அவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளைத் தொடர்புகொண்டு இதுகுறித்து அமைச்சருடன் ஆலோசனை செய்யுமாறு கூறினார்.

நிபந்தனைகளை முழுமையாக நீக்க முடியாவிடினும், உண்மை நிலைமையை எடுத்து விளக்கி, மத்திய அரசு பட்டாசு தொழிலைப் பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை மிகுந்த கனிவுடன் கேட்டுக்கொண்டதோடு, அமைச்சர் ஹர்ஷவர்த்தன் அவர்கள் என்னை மிகவும் அன்பாக நடத்தினார்கள்.

மத்திய அரசின் வர்த்தக தொழில் அமைச்சரான சுரேஷ் பிரபு அவர்களையும் நான் சந்தித்து பட்டாசு தொழிலைப் பாதுகாப்பதற்குத் தேவையான கோரிக்கை மனுவைக் கொடுத்தேன். அவரும் ஆவன செய்வதாக உறுதி அளித்தார்.

எனத் தெரிவித்துள்ளார்.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Related Posts